பரங்கிபேட்டை அருகே உள்ள கொ.பஞ்சங்குப்பதில் மதுரை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 1-7-2018 அன்று நடைபெற்றது. இதையொட்டி 29-ந்தேதி காலை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 2-ம் காலயாகசாலை பூஜையும், மாலை 3-ம் காலயாகசாலை பூஜையும் நடைபெற்றது நேற்று காலை 4-ம் காலயாகசாலை பூஜை நடைபெற்று காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக
எடுத்து செல்லப்பட்டு மதுரை மஹா காளியம்மன் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்
